மாணவர்கள் இடையே மோதல்


மாணவர்கள் இடையே மோதல்
x
தினத்தந்தி 30 Sept 2021 12:30 AM IST (Updated: 30 Sept 2021 12:30 AM IST)
t-max-icont-min-icon

மேலூர் பஸ் நிலையத்தில் மாணவர்கள் இடையே மோதல்

மேலூர்
மேலூர் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் மேலூரில் இருக்கும் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். இந்தநிலையில் நேற்று மேலூர் பஸ் நிலையத்தில் நின்ற பள்ளி மாணவிகளை கேலி செய்தது தொடர்பாக மாணவர்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கி கொண்டனர். மாணவர்ளின் ஆதரவாளர்களும் அங்கு வந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து நாவினிப்பட்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (32) என்பவரை மேலூர் போலீசார் கைது செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் இருதரப்பிலும் மாணவர்கள் உள்பட அடையாளம் தெரிந்த 30 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story