மாவட்ட செய்திகள்

பவானிசாகர் அணை கரையில் முகாமிட்ட யானைகள் + "||" + elephant

பவானிசாகர் அணை கரையில் முகாமிட்ட யானைகள்

பவானிசாகர் அணை கரையில் முகாமிட்ட யானைகள்
பவானிசாகர் அணை கரையில் யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுப்பணித்துறை ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.
பவானிசாகர் அணை கரையில் யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுப்பணித்துறை ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.
முகாமிட்ட யானைகள்
பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியை ஒட்டி பவானிசாகர் மற்றும் விளாமுண்டி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்தநிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியை ஒட்டியுள்ள அணையின் கரை பகுதியில் முட்புதர் காட்டில் முகாமிட்டுள்ளன. பகல் நேரங்களில் அணையின் நீர்தேக்க பகுதியில் காட்டு யானைகள் சுற்றி திரிவதால் பொதுப்பணித்துறை ஊழியர்கள் தங்களது அன்றாட பணிகளை செய்ய முடியாமல் அச்சமடைந்துள்ளார்கள்.
நேற்று பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியை ஒட்டி அமைந்துள்ள புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி நீரேற்று நிலையம் மற்றும் பவானிசாகர் பேரூராட்சி நீரேற்று நிலையம் பகுதியில் 2 யானைகள் சுற்றித் திரிந்தன. இதன் காரணமாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றும் குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள் யானைகளை கண்டு பயந்து நீரேற்று நிலையத்தில் பதுங்கிக் கொண்டனர். 
இரவில் அட்டகாசம்
 யானைகள் காட்டுக்குள் செல்லாமல் பவானிசாகர் அணையின் கரையிலேயே முகாமிட்டுள்ளன. கீழ்பவானி வாய்க்காலை கடந்து சென்று பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அணை பூங்காவின் சுற்றுச்சுவர் மற்றும் இரும்பு நுழைவாயில் கேட் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தி வருவதால் பவானிசாகர் பகுதியில் பொதுமக்கள் இரவு நேரத்தில் சாலையில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
அதனால் அணையின் கரைப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறை ஊழியர்கள் மற்றும் பவானிசாகர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
கேர்மாளம் அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் மக்காச்சோள பயிர் நாசம் ஆனது.
2. கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் : கேரளாவில் யானைகள் உயிரிழப்பு அதிகரிப்பு
நவம்பர் 2018 ஆம் நடத்தப்பட்ட யானைகள் கணக்கெடுப்பில் கேரளாவில் 519 யானைகள் இருந்துள்ளன .தற்போது அந்த எண்ணிக்கை 453 ஆக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. இரும்பு வேலியை சாதாரணமாக தாண்டி சென்ற யானை-வீடியோ
பந்திப்பூர் தேசிய வன உயிரியல் பூங்கா அருகே யானை ஒன்று, இரும்பு வேலியை தாண்டி செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.
4. வனப்பகுதியில் இறந்து கிடந்த யானை
ராஜபாளையம் வன பகுதியில் யானை இறந்து கிடந்தது.
5. ஆசனூர் அருகே அரசு பஸ்சை குட்டியுடன் வழிமறித்த யானை; கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது
ஆசனூர் அருகே அரசு பஸ்சை குட்டியுடன் வழிமறித்த யானை கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது.