காஞ்சீபுரம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது


காஞ்சீபுரம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது
x
தினத்தந்தி 30 Sept 2021 2:07 PM IST (Updated: 30 Sept 2021 2:07 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் சாலவாக்கம், உத்திரமேரூர் மற்றும் மணிமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொலை, அடிதடி மற்றும் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மதூர் கிராமத்தை சேர்ந்த இந்து சேகர் (37), வாலாஜாபாத் தாலுகா அஜித் (23), நசரத்பேட்டையை சேர்ந்த விஜயகுமார் (21), சித்தனக்காவூரை சேர்ந்த மணிகண்டன் என்ற அண்ணாத்தூர் மணி (36), மணிமங்கலத்தை சேர்ந்த ஏகா என்ற ஏகாம்பரம் (40) ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி 5 பேரை ஓராண்டு தடுப்புக்காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.

Next Story