மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு + "||" + Breaking the lock of a house in Tiruvallur and stealing jewelery and money

திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டது.
திருவள்ளூர்,

திருவள்ளூர் தகனிக்கோட்டையை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 45). நேற்று முன்தினம் வேல்முருகன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வீட்டை பூட்டிவிட்டு வேலை காரணமாக வெளியே சென்றார். இரவு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன.

நகை-பணம் திருட்டு

வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள், ரொக்கப்பணம் ரூ.78 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து அவர் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ரிசர்வ் வங்கி அதிகாரி வீட்டில் 27 பவுன் நகை திருட்டு
புழல் அருகே ரிசர்வ் வங்கி அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 27 பவுன் நகை, ரூ.1 லட்சம் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றுவி்ட்டனர்.
2. பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபர்
பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபர் பற்றி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
3. முதியவர்களிடம் ஏ.டி.எம்.கார்டை நூதன முறையில் மாற்றி பணம் திருட்டு: கைதான 3 பேர் பற்றி பரபரப்பு தகவல்கள்
முதியவர்களிடம் ஏ.டி.எம். கார்டை நூதன முறையில் மாற்றி பணம் திருடிய பீகார் மாநில வாலிபர்கள் 3 பேர் கைதானது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
4. கதை திருட்டு விஷயம் தெரிந்ததும் நஷ்ட ஈடு வழங்கிய சூர்யா
நடிகர் சூர்யா தயாரிப்பில் வெளியான திரைப்படம் ஒன்று கதைத் திருட்டு சர்ச்சையில் சிக்கிய விவகாரம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா வேட்பாளரின் கணவர் கைது
நாங்குநேரி அருகே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது தொடர்பாக பெண் வேட்பாளரின் கணவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.