அரசு பள்ளியில் புதிய ஆய்வகம் திறப்பு


அரசு பள்ளியில் புதிய ஆய்வகம் திறப்பு
x
தினத்தந்தி 1 Oct 2021 12:40 AM IST (Updated: 1 Oct 2021 12:40 AM IST)
t-max-icont-min-icon

வீரவநல்லூர் பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய ஆய்வகம் திறப்பு விழா நடந்தது.

சேரன்மாதேவி:
வீரவநல்லூர் பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று புதிய ஆய்வக திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அடல் டிங்கரிங் (தொழில்நுட்ப) ஆய்வகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் மதியழகி வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துக்கிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் சுடலை ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, ஒன்றிய செயலாளர்கள் சேரன்மாதேவி கருத்தப்பாண்டி, அம்பை விஜயபாலாஜி, நகர செயலார்கள் வீரவநல்லூர் சுப்பிரமணியன், சேரன்மாதேவி பழனிகுமார், அம்பை அறிவழகன், விக்கிரமசிங்கபுரம் கண்ணன், சேரன்மாதேவி மாரிச்செல்வம், வக்கீல் சிவசுப்பிரமணியன், மகாராஜன் மற்றும் மாணவ-மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சங்கர் நன்றி கூறினார்.
1 More update

Next Story