சேலம் மாவட்டத்தில் புதிதாக 60 பேருக்கு கொரோனா


சேலம் மாவட்டத்தில் புதிதாக 60 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 30 Sep 2021 8:52 PM GMT (Updated: 30 Sep 2021 8:52 PM GMT)

சேலம் மாவட்டத்தில் புதிதாக 60 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சேலம்
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் மாவட்டத்தில் 62 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று மாவட்டத்தில் புதிதாக 60 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
அதன்படி மாநகர் பகுதியில் 18 பேர் பாதிக்கப்பட்டனர். எடப்பாடி, காடையாம்பட்டி, நங்கவள்ளி, ஓமலூர், சங்ககிரியில் தலா ஒருவர், மகுடஞ்சாவடி, சேலம் ஒன்றிய பகுதியில் தலா 3 பேர், கொளத்தூரில் 4 பேர், வீரபாண்டியில் 8 பேர் பாதிக்கப்பட்டனர்.
60 பேர்
கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, வாழப்பாடியில் தலா ஒருவர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 3 பேர், ஆத்தூரில் 5 பேர் பாதிக்கப்பட்டனர். நரசிங்கபுரம், ஆத்தூர், மேட்டூர் நகராட்சி பகுதிகளில் 5 பேர் என மாவட்டத்தில் மொத்தம் 60 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
இதுவரை மாவட்டத்தில் 98 ஆயிரத்து 120 பேர் பாதிக்கப்பட்டனர். 95 ஆயிரத்து 693 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். தொற்று பாதிப்பால் நேற்று ஒருவர் இறந்தார். இதன்மூலம் இதுவரை மாவட்டத்தில் 1,665 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.


Next Story