ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Sep 2021 9:53 PM GMT (Updated: 30 Sep 2021 9:53 PM GMT)

காரியாபட்டியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காரியாபட்டி, 
காரியாபட்டி ஒன்றியத்தில் உள்ள ஒரு சில ஊராட்சிகளில் மத்திய அரசு திட்டங்களான முழு சுகாதாரம், தனிநபர் கழிப்பறை கட்டுவது, 100 நாட்கள் வேலை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதை கண்டித்து யூனியன் அலுவலகம் முன்பு பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாதார பிரிவு செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பாலமுருகன், ஒன்றிய செயலாளர் இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கோரிக்கை மனுக்களை யூனியன் ஆனையாளர் ராஜசேகரனிடம் கொடுத்தனர். இதில் தகவல்தொடர்பு பிரிவு ராஜபாண்டியன், கோதண்டம், ராமசாமி. அக்னி பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
காரியாபட்டியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story