குன்றத்தூர் அருகே சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது


குன்றத்தூர் அருகே சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 1 Oct 2021 8:56 AM GMT (Updated: 1 Oct 2021 8:56 AM GMT)

குன்றத்தூர் அருகே சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது.

பூந்தமல்லி,

குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கத்தை சேர்ந்த 20 வயதுடைய பெண் பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் நந்தம்பாக்கத்தை சேர்ந்த குமரன் (29), என்பவர் தனக்கு 15 வயது இருக்கும்போது அவரது வீட்டுக்கு சென்றபோது தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இந்த விஷயம் தெரிந்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாகவும் தற்போது தன்னை வீட்டை விட்டு விரட்டி விட்டு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வாழ்ந்து வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசார் குமரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Next Story