கல்பாக்கம் அருகே அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு


கல்பாக்கம் அருகே அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு
x
தினத்தந்தி 1 Oct 2021 9:05 AM GMT (Updated: 1 Oct 2021 9:05 AM GMT)

கல்பாக்கம் அருகே அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு.

கல்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியம் கடலூர் 4-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணி அலுவலகம் திறப்பு விழா கடலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சன், மாவட்ட பிரதிநிதி தங்கராஜ், மாவட்ட இணைச்செயலாளர் கே.எம். ராமமூர்த்தி, நிர்வாகிகள் பாரதி பாபு, சர்க்கரை மணி, காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story