போலி ஆவணம் மூலம் ரூ.1 கோடி நிலம் அபகரிப்பு;2 பெண்கள் உள்பட 6 பேர் கைது
சென்னை புழுதிவாக்கத்தில் போலி ஆவணம் மூலம் ரூ.1 கோடி நிலம் அபகரிக்கபட்டதாக சுந்தரம் மத்திய குற்றப்பிரிவு நிலஅபகரிப்பு பிரிவில் புகார் கொடுத்தார். நில அபகரிப்பில் ஈடுபட்டதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மடிப்பாக்கம் புழுதிவாக்கத்தில் நிர்மலா சுந்தரம் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. ரூ.1 கோடி மதிப்புள்ள அந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் சிலர் அபகரித்து விட்டதாக, நிர்மலாசுந்தரம் சென்னை மத்திய குற்றப்பிரிவு நிலஅபகரிப்பு பிரிவில் புகார் கொடுத்தார்.
இன்ஸ்பெக்டர் தனலட்சுமி இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். நில அபகரிப்பில் ஈடுபட்டதாக அன்னபுஷ்பம் (வயது 66), பாஸ்கரன் (44), சாலமன் (36), மகேஷ் (46), பிரபு (37), நந்தினி (46) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story