பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி


பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 1 Oct 2021 11:49 AM GMT (Updated: 2021-10-01T17:19:02+05:30)

பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி

தாராபுரம்
தாராபுரம் குண்டடம் மூலனூர் அலங்கியம் தளவாய்பட்டினம் கோவிந்தாபுரம் மேட்டுக்கடை உள்ளிட்ட பகுதிகளிலும் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் நல்லதங்காள் ஓடை அணை உப்பாறு அணை பகுதிகளில் மழைநீர் சென்றதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அந்த பகுதிகளில் குளிர்ச்சி ஏற்பட்டு இதமான சீதோஷ்ண நிலை ஏற்பட்டு உள்ளது‌. அதன்படி தாராபுரம் பகுதியில் 37 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 
அதே போல் குண்டடம் பகுதியில்  நேற்று அதிகாலை 3 மணியளவில் கனமழை பெய்யதொடங்கி காலை 6 மணிவரை கொட்டித்தீர்த்தது. இந்த மழையினால் காடுகளில் வெள்ளம்போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தீவன பயிர்கள் பயிர் செய்யவும் குடிநீர் பஞ்சமும் குறையும் என்பதால் விவசாயிகள் மகிச்சியடைந்துள்ளனர்
----Next Story