வேங்கைவாசல் பகுதியில் நடிகை குஷ்பு பிரசாரம்


வேங்கைவாசல் பகுதியில் நடிகை குஷ்பு பிரசாரம்
x
தினத்தந்தி 1 Oct 2021 12:08 PM GMT (Updated: 1 Oct 2021 12:08 PM GMT)

பரங்கிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பொழிச்சலூர், வேங்கைவாசல் பகுதிகளில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு நேற்று மாலை, பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

பா.ஜ.க.வின் 7 ஆண்டு ஆட்சியில் பிரதமர் மோடி, ஒவ்வொரு வீட்டுக்கும் தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழகத்துக்கு 6 லட்சம் கோடிக்கு நலத்திட்டங்களை வழங்கி உள்ளார். மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள். அ.தி.மு.க., ஆட்சியிலும் மக்களுக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தல் என்பது மிக முக்கியமான தேர்தல். ஒவ்வொரு பகுதி மக்களும் தங்கள் பகுதியில் யார் வரவேண்டும்? என முடிவு செய்யக்கூடிய தேர்தல்.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story