கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து;வீடு தரைமட்டமானது


கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து;வீடு தரைமட்டமானது
x
தினத்தந்தி 1 Oct 2021 9:08 PM IST (Updated: 1 Oct 2021 9:08 PM IST)
t-max-icont-min-icon

கோபியில் கியாஸ் சிலிண்டர் ெ்வடித்து சிதறியதில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடு தரைமட்டமானது. இதில் தாய் மற்றும் மகன் உயிர் தப்பினர்.

கோபியில் கியாஸ் சிலிண்டர் ெ்வடித்து  சிதறியதில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடு தரைமட்டமானது. இதில் தாய் மற்றும் மகன் உயிர் தப்பினர்.
கரும்புகை 
கோபி தேர் வீதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது 70). இவருடைய மகன் ராஜேஷ் (47). தனியார் கூரியர் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். 
இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 4 மணிஅளவில் வீட்டின் சமையல் அறையில் இருந்து கரும்புகை வந்து உள்ளது. கரும்புகை நெடி வீசியதும், 2 பேரும் தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்தனர். 
கியாஸ் சிலிண்டர் வெடித்தது
அப்போது ராஜேஷ் எழுந்து சமையல் அறைக்கு சென்றார். அங்கு சமையல் அறையில் உள்ள பொருட்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே ராஜேஷ் வெளியே ஓடி வந்தார். இதற்கிடையே சமையல் அறையில் வைக்கப்பட்டிருந்த கியாஸ் சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.  இதனிடையே கியாஸ் சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்களும் ராஜேசின் வீட்டை நோக்கி ஓடி வந்தனர். இதைத்தொடர்ந்து வீட்டின் மற்றொரு அறையில் இருந்த ராஜலட்சுமி பத்திரமாக மீட்கப்பட்டார். மேலும் ராஜேஷ் சுதாரித்து கொண்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு கியாஸ் சிலிண்டரை தூக்கி கொண்டு வெளியே வந்துவிட்டார். இதில் லேசான காயத்துடன் ராஜேஷ் உயிர் தப்பினார்.
தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்த சிறிது நேரத்தில் வீடு இடிந்து விழுந்து தரைமட்டமானது. 
பரபரப்பு
இதுபற்றி அறிந்ததும் கோபி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.
 இதுபற்றி தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், ‘மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு கியாஸ் சிலிண்டர் வெடித்து உள்ளது,’ என்றனர். 
இதுகுறித்து கோபி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் கோபி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
1 More update

Next Story