இன்ஸ்பெக்டருக்கு வாரண்டு


இன்ஸ்பெக்டருக்கு வாரண்டு
x
தினத்தந்தி 1 Oct 2021 6:08 PM GMT (Updated: 1 Oct 2021 6:08 PM GMT)

சாட்சி சொல்ல வராத இன்ஸ்பெக்டருக்கு வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

சிவகங்கை, 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக கடந்த 2014-ம் ஆண்டில் பணிபுரிந்த செல்வம் மற்றும் அந்த அலுவலகத்தில் இருந்த புரோக்கர் ஆறுமுகம் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். 
இது தொடர்பான வழக்கு சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்கு சிவகங்கையில் உள்ள ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் குணசேகர மந்திர செல்வி என்பவர் சாட்சி சொல்ல வரவில்லையாம். இதைத்தொடர்ந்து வருகிற 7-ந் தேதிக்குள் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வாரண்ட் பிறப்பித்து லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உதய வேலவன் உத்தரவிட்டார்.

Next Story