கோவில் நகைகளை உருக்கக்கூடாது


கோவில் நகைகளை உருக்கக்கூடாது
x
தினத்தந்தி 1 Oct 2021 6:49 PM GMT (Updated: 1 Oct 2021 6:49 PM GMT)

கோவில் நகைகளை உருக்கக்கூடாது என பா.ஜனதா முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.

புதுக்கோட்டை, 
புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த பா.ஜனதா முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ருத்ர தாண்டவம் படத்தில் இந்து மக்களின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த படத்திற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறை எவ்வாறு செயல்பட வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு மதித்து நடக்கவில்லை. கோவில்களில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் தங்க நகைகளை உருக்கக்கூடாது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்'' என்றார்.

Next Story