மது விற்ற பெண் உள்பட 4 பேர் கைது


மது விற்ற பெண் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 2 Oct 2021 1:55 AM IST (Updated: 2 Oct 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

மது விற்ற பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜெயங்கொண்டம்:

போலீசார் சோதனை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், கல்லாத்தூர் பகுதிகளில் குடிசை தொழில்போல் டீக்கடை மற்றும் பொது இடங்களில் டாஸ்மாக் மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், டி.மங்களம் பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது கல்லாத்தூர், வடவீக்கம் மற்றும் டி.மங்களம் உள்ளிட்ட பகுதிகளில் டீக்கடை மற்றும் பொது இடங்களில் மது விற்பனை செய்தவர்களை பிடித்து விசாரித்தனர்.
கைது
இதில் அவர்கள் கல்லாத்தூர், டி.மங்களம், வடவீக்கம் கிராமங்களை சேர்ந்த வேல்முருகன்(வயது 42), கூடலிங்கம் (56), மலர் (68), ஆதிமூலம் (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 150 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story