சேலம் மாவட்டத்தில் 23 வருவாய் ஆய்வாளர்கள் பணி இடமாற்றம்


சேலம் மாவட்டத்தில் 23 வருவாய் ஆய்வாளர்கள் பணி இடமாற்றம்
x
தினத்தந்தி 1 Oct 2021 9:14 PM GMT (Updated: 1 Oct 2021 9:14 PM GMT)

சேலம் மாவட்டத்தில் 23 வருவாய் ஆய்வாளர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம்
பணி இடமாற்றம்
சேலம் மாவட்டத்தில 2 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் 23 வருவாய் ஆய்வாளர்களை பணி இடமாற்றம் செய்து மாவட்ட வருவாய் அதிகாரி ஆலின்சுனேஷா உத்தரவிட்டு உள்ளார். அதன்படி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை முதுநிலை வருவாய் ஆய்வாளர் குமார், கெங்கவல்லி தாலுகா அலுவலகத்திற்கும், செந்திலரசு வேம்படிதாளத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதே போன்று மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் பணியாற்றிய கார்த்திக் வாழப்பாடிக்கும், உதவி கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றிய சந்திரசேகரன் காரிப்பட்டிக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.
மேட்டூர் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றிய நீலா, பாலமலைக்கும், எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் பணியாற்றிய நதியா கொங்கணாபுரத்திற்கும், சங்ககிரி கலால் அலுவலக வருவாய் ஆய்வாளர் முருகேசன் தாரமங்கலத்திற்கும், சேலம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் பணியாற்றிய செல்வராஜ் எர்ணாபுரத்திற்கும், ஏற்காடு சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் பணியாற்றிய அன்புரோஸ், ஏத்தாப்பூருக்கும், சங்ககிரி வட்ட வழங்கல் அலுவலகத்தில் பணியாற்றிய மாணிக்கம், மேட்டூருக்கும், சேலம் உதவி கலெக்டர் அலுவலக வருவாய் அலுவலர் ராதா, செம்மாண்டபட்டிக்கும், கெங்கவல்லி வட்ட வழங்கல் அலுவலகத்தில் பணியாற்றிய வளர்மதி, பெத்தநாயக்கன்பாளையத்திற்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தில் பணியாற்றிய ஸ்வர்ணாம்பிகை, திருமலைகிரிக்கும், கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றிய ஜமுனாராணி, வலசையூருக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.
காரிப்பட்டி
ஓமலூர் தாலுகா அலுவலக வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன் மேச்சேரிக்கும், கூடுதல் கோட்ட கலால் அலுவலக வருவாய் ஆய்வாளர்கள் மைதிலி சூரமங்கலத்திற்கும், மயில்சாமி, கொளத்தூருக்கும், ஏற்காடு வட்ட வழங்கல் அலுவலகத்தில் பணியாற்றிய ராஜகண்ணன், புத்தூருக்கும் மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.
தாரமங்கலம் வருவாய் ஆய்வாளர் பாஸ்கர், சேலத்திற்கும், பாலமலையில் பணியாற்றிய ராஜூ, சங்ககிரிக்கும், காரிப்பட்டியில் பணியாற்றிய நந்தினி, கொண்டலாம்பட்டிக்கும், புத்தூரில் பணியாற்றிய வைத்தீஸ்வரன், ஏற்காட்டிற்கும், கெங்கவல்லி வருவாய் ஆய்வாளர் கனிமொழி, தலைவாசலுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.


Next Story