தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 1 Oct 2021 9:56 PM GMT (Updated: 1 Oct 2021 9:56 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி

குண்டும்-குழியுமான சாலை

கோவை கணபதி மூர் மார்க்கெட் பகத்சிங் வீதியில் தெருவில் கான்கிரீட் சாலை போடப்பட்டது. அதை முறையாக போடாததால் குண்டும்-குழியுமாக இருக்கிறது. இதனால் இந்த வழியாக நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

  மகேந்திரன், பகத்சிங் வீதி.

தெரு நாய்கள் தொல்லை

  குன்னூர் கிருஷ்ணாபுரத்தில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் வீட்டில் வளர்க்கும் நாய்களும் முறைப்படி வளர்க்கப்படுவதில்லை. இதனால் அந்த பகுதியில் குழந்தை கள் மற்றும் வயதானவர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். .

  அப்துல் சத்தார், குன்னூர்.

போலீஸ் நிலையம் வேண்டும்

  கோவையை அடுத்த கோவைப்புதூர் முக்கிய நகரமாகி வருகிறது. இங்கு வசிக்கும் பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டுமென்றால் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே முக்கிய நகரமாக திகழும் கோவை புதூரில் தனியாக போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும்.

  சுரேஷ், கோவைப்புதூர்.

சேறும், சகதியுமான ரோடு 

  கோவை குனியமுத்தூர் வசந்தம் நகர் லவ்லி கார்டனில் உள்ள சாலை மழைநீர் தேங்கி நிற்பதால் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயத்துடன் உயிர் தப்பிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த சாலையை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும்.

  துரைசாமி, வசந்தம் நகர்.

போக்குவரத்துக்கு இடையூறு

  பெரியநாயக்கன்பாளையத்தில் மேம்பால கட்டுமான பணி நடைபெற்று வருவதால் ரெயில்வே பீடர் ரோடு வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது. அங்கு உள்ள சார்பதிவாளர் அலுவலகம் முன்பு வாகனம் நிறுத்தும் இடம் இருந்தும் வாகன ஓட்டிகள் அங்கு வாகனங்களை நிறுத்தாமல் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு உள்ளது. இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  குமார், பெரியநாயக்கன்பாளையம்.

பயனற்ற போக்குவரத்து சிக்னல்

  கோவை ஒண்டிப்புதூரை அடுத்த காமாட்சிபுரம் பஸ் நிறுத்தம் எதிரே அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு உள்ள போக்குவரத்து சிக்னல் கீழே விழுந்து ஒரு ஆண்டுக்கும் மேலாக பயனற்ற நிலையில் உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்யவார்களா?.

  பாண்டியன், காமாட்சிபுரம்.

பஸ்கள் இயக்க வேண்டும்

  கோவை காந்திபுரத்தில் இருந்து ஆவாரம்பாளையத்துக்கு ஏ-1 என்ற 2 அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக இங்கு அந்த பஸ்கள் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக இந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே இங்கு அரசு பஸ்களை இயக்க வேண்டும்.

  சுந்தரேசன், ஆவாரம்பாளையம்.

வீடுகளுக்குள் புகும் மழைநீர்

  கோவை கணபதியில் உள்ள பதிகவுண்டர் தோட்டம் 4-வது வீதியில் சாக்கடை கால்வாய் சரியாக சுத்தம் செய்வது இல்லை. இதனால் மழைக்காலத்தில் சாக்கடை தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. தற்போது கோவையில் பரவலாக மழை பெய்து வருவதால், இங்குள்ள சாக்கடை கால்வாய்களை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.

  அருள்ஜோதி, கணபதி.

வாகன ஓட்டிகள் அவதி

  பொள்ளாச்சி-பல்லடம் ரோட்டில் உள்ள நியுஸ்கியூம் சந்திப்பு பகுதியில் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயங்களுடன் உயிர் தப்பித்து செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சாலையை சரிசெய்ய வேண்டும்.

  ராஜா, பொள்ளாச்சி.

பாதியில் நிற்கும் பணி

  பொள்ளாச்சியில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. தற்போது அந்த பணி பாதியில் நிற்பதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சாலை அமைக்கும் பணியை தொடங்கி, விரைந்து முடிக்க வேண்டும்.

  முருகன், பொள்ளாச்சி.

நாணயம் வாங்க மறுப்பு

  கோவையில் உள்ள மளிகை கடை, பஸ்கள் உள்பட அனைத்து இடங் களிலும் 10 ரூபாய் நாணயத்தை யாரும் வாங்குவது இல்லை. கேட்டால் அந்த நாணயங்கள் செல்லாது என்று கூறுகிறார்கள். அப்படி எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. எனவே 10 ரூபாய் நாணயத்தை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  செந்தில், கோவை.

போக்குவரத்து நெரிசல்

  பொள்ளாச்சி உழவர் சந்தை சாலையில் 2 டாஸ்மாக் அருகருகே உள்ளன. இதனால் அந்தப்பகுதியில் மதுபானங்கள் வாங்க பலர் குவிவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அங்கு போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  மதியழகன், பொள்ளாச்சி.


Next Story