புனேவில் இருந்து 11½ லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன


புனேவில் இருந்து 11½ லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
x
தினத்தந்தி 2 Oct 2021 5:43 AM GMT (Updated: 2 Oct 2021 5:43 AM GMT)

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 4 கோடியே 66 லட்சத்து 45 ஆயிரத்து 610 தடுப்பூசிகள் வந்து உள்ளன. இந்த நிலையில் புனேவில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் 97 பெட்டிகளில் 11 லட்சத்து 60 ஆயிரம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் வந்தன. தமிழகத்துக்கு வந்த தடுப்பூசிகள், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

Next Story