விபத்தில் மெக்கானிக் சாவு


விபத்தில் மெக்கானிக் சாவு
x
தினத்தந்தி 2 Oct 2021 7:53 PM GMT (Updated: 2 Oct 2021 7:53 PM GMT)

கார்-சரக்கு வாகனம் மோதிய விபத்தில் மெக்கானிக் இறந்தார்.

சிவகாசி, 

வெம்பக்கோட்டை தாலுகாவில் உள்ள மாதாங்கோவில்பட்டியை சேர்ந் தவர் ஜெயபாண்டி (வயது 43). இவர் சிவகாசியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவகாசி-ஆலங்குளம் ரோட்டில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே ரோட்டில் வந்த சரக்கு வாகனம் ஒன்று கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஜெயபாண்டியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்த போது ஜெயபாண்டி இறந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரது மனைவி ஜெயலட்சுமி மாரனேரி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விபத்துக்கு காரணமான வாகனத்தை ஓட்டி வந்த பெரியபொட்டல்பட்டியை சேர்ந்த பாண்டியராஜ் (41) என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story