சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்


சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 2 Oct 2021 8:36 PM GMT (Updated: 2 Oct 2021 8:36 PM GMT)

சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.

மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே சம்போடை கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை தோறும் சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனைகள் நடைபெறும். மேலும் 3-வது சனிக்கிழமையன்று திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு பூலோக முறைப்படி திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. இதையொட்டி பொதுமக்கள் மேளதாளத்துடன் சீர்வரிசை தட்டுகள் எடுத்துவந்தனர். பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது கோவிந்தா... நாராயணா... என்ற பக்தி கோஷங்களை எழுப்பி பக்தர்கள் வழிபட்டனர். இதில் மீன்சுருட்டி, கங்கை கொண்ட சோழபுரம், சம்போடை மற்றும் சுற்றுவட்டார, வெளியூர் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானமும் நடைபெற்றது.
 

Next Story