காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சைக்கிள் பேரணி


காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சைக்கிள் பேரணி
x
தினத்தந்தி 3 Oct 2021 2:33 AM GMT (Updated: 3 Oct 2021 2:33 AM GMT)

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், ஐகோர்ட்டு ஆகியவற்றில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ் சார்பில் அமைதி, அகிம்சை ஆகியவற்றை வலியுறுத்தி வெள்ளை உடையில் சைக்கிள் பேரணி நடந்தது.

பழவந்தாங்கல் மத்திய தொழில் பாதுகாப்பு படை வளாகத்தில் இருந்து புறப்பட்ட சைக்கிள் பேரணியை மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ் டி.ஐ.ஜி. ஸ்ரீராம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பழவந்தாங்கல், மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலை, பல்லாவரம் வழியாக சென்ற சைக்கிள் பேரணி, சென்னை விமான நிலையத்தில் முடிவடைந்தது.

Next Story