மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் நினைவு தினம்


மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் நினைவு தினம்
x
தினத்தந்தி 3 Oct 2021 4:28 AM GMT (Updated: 3 Oct 2021 4:28 AM GMT)

மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். ஆசிரியர் சுஜாதா முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை ஜெகஜோதி வரவேற்றார்.

மணலி சேக்காடு பொது வியாபாரிகள் சங்க நிறுவனத்தலைவர் மணலி தங்கம் காமராஜர் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில் சென்னைவாழ் நாடார் சங்க செயலாளர் செல்லத்துரை, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பண்பாட்டு கழக தலைவர் மாரிமுத்து, சமத்துவ மக்கள் கட்சி திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் மணலி பாலா, காமராஜர் கல்வி பாசறை தலைவர் ஜெயகுமார், பொருளாளர் சின்னதுரை, மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் காளியப்பன், செயலாளர் அரிகரன், பொருளாளர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பள்ளி மாணவிகள் பங்கேற்ற காமராஜர் குறித்த பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் உதவி தலைமை ஆசிரியை சித்ரா ஜெயசீலி நன்றி கூறினார்.


Next Story
  • chat