கிராம சபை கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வினர் மோதல்


கிராம சபை கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வினர் மோதல்
x
தினத்தந்தி 3 Oct 2021 9:26 AM GMT (Updated: 3 Oct 2021 9:26 AM GMT)

பொன்னேரி அருகே கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஈகுவார்பாளையம் ஊராட்சி மன்றத்தில் உள்ள சித்தூர் நத்தம் கிராமத்தில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இந்த கிராம சபை கூட்டத்திற்கு பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அந்த பகுதி ஒன்றிய கவுன்சிலரும் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவருமான சிவகுமார் கூட்டத்திற்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டி பேசினார். தி.மு.க.வை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் உஷாஸ்ரீதருக்கும், ஒன்றிய குழு தலைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஸ்ரீதர், ஒன்றிய குழு தலைவரை பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதனால் அ.தி.மு.க., தி.மு.க.வினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றம் உருவாகும் சூழ்நிலை உருவானது இதனை தொடர்ந்து ஒன்றிய குழுத்தலைவர் சிவகுமாரை அ.தி.மு.க.வினர் பத்திரமாக அழைத்துச்சென்றனர்.


Next Story