மாவட்ட செய்திகள்

தாய்ப்பால் குடித்த 1 வயது குழந்தை சாவு + "||" + Child

தாய்ப்பால் குடித்த 1 வயது குழந்தை சாவு

தாய்ப்பால் குடித்த 1 வயது குழந்தை சாவு
தாய்ப்பால் குடித்த 1 வயது குழந்தை மர்மமாக இறந்தது.
கரூர்
தாய்ப்பால் குடித்த குழந்தை
கரூர் கருப்பாயி கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானசேகர். இவருடைய மகள் ஸ்ரீதனுஷா (வயது 21). இவரது மகள் தருணிகா (1). 
இந்தநிலையில் ஸ்ரீதனுஷா நேற்று முன்தினம் காலை தனது குழந்தை தருணிகாவுக்கு தாய்ப்பால் கொடுத்து தூங்க வைத்துள்ளார். பிறகு மதியம் குழந்தையை எழுப்பியபோது எழுந்திருக்கவில்லை என கூறப்படுகிறது.
சாவு
இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதனுஷா தனது குழந்தையை தூக்கிக் கொண்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தை தருணிகாவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
இதுகுறித்து கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் வழக்குப்பதிவு செய்து குழந்தை எப்படி இறந்தது என தீவிர விசாரணை நடத்தி வருகிறார். தாய்ப்பால் குடித்த 1 வயது குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.2½ லட்சத்துக்கு குழந்தை விற்கப்பட்ட வழக்கு: பெண் புரோக்கர்கள் உள்பட 3 பேர் கைது
சென்னையில் பிறந்த 5 நாளில் ரூ.2½ லட்சத்திற்கு விற்கப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. இதுதொடர்பாக பெண் புரோக்கர்கள் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார், பணம் கொள்ளை போனதாக நாடகமாடிய தாயையும் பிடித்தனர்.
2. பெண் பார்க்க வந்தவருடன் மலர்ந்த காதலால் கர்ப்பம்: சாக்குமூட்டையில் கட்டி வைத்த பச்சிளம் குழந்தை சாவு பாட்டி கைது
பெண் பார்க்க வந்தவருடன் மலர்ந்த காதலால் கர்ப்பம் அடைந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை கொன்றதாக பாட்டி கைது செய்யப்பட்டார்.
3. பிக்பாஸ் ஆரவ் - ராஹி தம்பதிக்கு குழந்தை பிறந்தது
பிக்பாஸ் சீசன் ஒன் நிகழ்ச்சியில் வெற்றியாளராக தேர்வான ஆரவ் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.
4. குழியில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி
குழியில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி
5. உளுந்தூர்பேட்டை அருகே பாிதாபம் சுடுகஞ்சி கொட்டி 1 வயது குழந்தை பலி
உளுந்தூர்பேட்டை அருகே சுடுகஞ்சி கொட்டி 1 வயது பெண் குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது