மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு


மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 4 Oct 2021 9:25 AM GMT (Updated: 4 Oct 2021 9:25 AM GMT)

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தஜிம் அலி ஷேக் மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக இறந்தார்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் தஜிம் அலி ஷேக் (வயது 22). இவர், சென்னையை அடுத்த பெருங்களத்தூர் அருகே உள்ள நெடுங்குன்றம், சிவன் கோவில் தெருவில் தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான கட்டிடத்தில் தங்கி, கட்டுமான வேலையில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் மாலை கட்டுமான வேலை செய்து கொண்டிருந்தபோது தண்ணீர் வராததால், தண்ணீர் தொட்டியின் உள்ளே இருந்த மின் மோட்டாரை தஜிம் அலி ஷேக் வெளியே எடுத்தார். அப்போது மின்சாரம் தாக்கியதில் தஜிம் அலி ஷேக் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி பீர்க்கன்காரணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story