பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்


பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
x
தினத்தந்தி 4 Oct 2021 11:48 AM GMT (Updated: 4 Oct 2021 11:48 AM GMT)

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஆகிய ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு நிறைவேற்றப்படுகிறது.

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்தது. இதையடுத்து பூண்டி ஏரியில் இருந்து புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. 

இந்தநிலையில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த மாதம் 20-ந் தேதி தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 22-ந் தேதி அன்று பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் வரத்து முழுவதுமாக நின்றது. இதையடுத்து பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு நேற்று முன்தினம் இரவு முதல் நிறுத்தப்பட்டது. எனினும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது.நேற்று காலை 6 மணி நிலவரப்படி பூண்டி ஏரியில் 2.513 டி.எம்.சி.யும், செம்பரம்பாக்கம் ஏரியில் 2.879 டி.எம்.சி.யும், புழல் ஏரியில் 2.964 டி.எம்.சி. தண்ணரும் இருப்பு உள்ளது.


Next Story