நிரம்பி வழியும் தடுப்பணைகள்


நிரம்பி வழியும் தடுப்பணைகள்
x
தினத்தந்தி 4 Oct 2021 4:14 PM GMT (Updated: 4 Oct 2021 4:14 PM GMT)

வேடசந்தூர் அருகே தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன.


வேடசந்தூர்:

திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குடகனாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

அதன்படி வேடசந்தூர் அருகே உள்ள கிரியம்பட்டி, அய்யம்பாளையம் ஆகிய தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது. உபரிநீர் வெளியேறி, லட்சுமணம்பட்டி தடுப்பணையும் நிரம்பி அழகாபுரி குடகனாறு அணைக்கு செல்கிறது.

லட்சுமணம்பட்டி தடுப்பணை நிரம்பி, தண்ணீர் வழிந்தோடி ரம்மியமாக காட்சி அளிக்கிறது. இங்கு வந்து, சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் ஆனந்தமாய் குளித்து செல்கின்றனர். மேலும் இளைஞர்கள் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

Next Story