இதுவரை 56,436 பேருக்கு கொரோனா தடுப்பூசி


இதுவரை 56,436 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 4 Oct 2021 4:29 PM GMT (Updated: 4 Oct 2021 4:29 PM GMT)

இதுவரை 56,436 பேருக்கு கொரோனா தடுப்பூசி

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் இதுவரை 56 ஆயிரத்து 436 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா தடுப்பூசி

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் வாரப்பட்டி, வதம்பச்சேரி, செஞ்சேரிப்புத்தூர், ஜல்லிபட்டி, பூராண்டாம்பாளையம், ஜே.கிருஷ்ணாபுரம், பாப்பம்பட்டி, கள்ளப்பாளையம், எஸ்.குமாரபாளையம், தாளக்கரை, வட வேடம்பட்டி, அப்பநாயக்கன்பட்டி உள்படமொத்தம் 20 ஊராட்சிகள் உள்ளன.இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக ஒன்றியத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினரால் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள், முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி தொடர்ந்து போடப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. 
இதுகுறித்து சுல்தான்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி, வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் வனிதா ஆகியோர் கூறியதாவது:- 

வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்

சுல்தான்பேட்டைஒன்றியத்தில் கொரோனா பரவாமல் இருக்க தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை 56 ஆயிரத்து 436 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடவேண்டியுள்ளது. 
இந்தப் பணியும் விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவை முற்றிலும் ஒழிக்க பொதுமக்கள் அனைவரும் அரசு கூறும் வழிமுறைகளை முழுமையாக கடை பிடிக்க வேண்டும், இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story