வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை; போலீஸ் ஏட்டு இடமாற்றம்


வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை; போலீஸ் ஏட்டு இடமாற்றம்
x
தினத்தந்தி 5 Oct 2021 2:08 PM IST (Updated: 5 Oct 2021 2:08 PM IST)
t-max-icont-min-icon

சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ் ஏட்டு ஒருவர், அதே போலீஸ் நிலையத்தில் வேலை செய்து வந்த 34 வயது பெண் பணியாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டரிடம் அந்த பெண் புகார் தெரிவித்தும், ஏட்டு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. அந்த போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் நுண்ணறிவு பிரிவு போலீசாரும், இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் பணியாளர், அதன்பிறகு போலீஸ் நிலையத்துக்கு பணிக்கு செல்லவில்லை.

இதையறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள், அந்த போலீஸ் ஏட்டை எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்தனர். ஆனால் அந்த போலீஸ்காரர் மீது எழுத்து பூர்வமான புகார் எதுவும் தெரிவிக்காமல், விசாரணை மட்டும் நடந்து வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.


Next Story