காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை என காஞ்சீபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பா.லிங்கேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ளது. அவ்வாறு தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள்,தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்டப்படியான மேல் நடவடிக்கை தொடரப்படும்.
விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் குறித்து கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் புகார்களை தெரிவிக்கலாம்.
காஞ்சீபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பா. லிங்கேஸ்வரன் 8778619552, அலுவலக தொலைபேசி எண். 044-27237010,
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story