காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு 19 கிலோ வெள்ளிகவசத் தடிகள் பக்தர் காணிக்கை
அத்திவரதர் புகழ் பெற்ற காஞ்சீபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பெருந்தேவி தாயாருக்கு விழாக்காலங்களில் கோவிலுக்குள்ளேயே உற்சவ புறப்பாடு நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் விழாக்காலங்களில் பெருந்தேவித் தாயாரை சுமந்து செல்லும் வகையில் ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள் மடத்தின் சீடரான சென்னையை சேர்ந்த லட்சுமி நரசிம்மன் என்ற பக்தர் தனது சொந்த செலவில் காணிக்கையாக ரூ.13.35 லட்சம் மதிப்பீட்டில் 9 அடி ஆலமர விழுதை பயன்படுத்தி 19 கிலோ 446 கிராம் எடையில் வெள்ளித் தகடு பதித்து வெள்ளி கவசத் தடிகளை செய்திருந்தார்.
இதையடுத்து, நேற்று ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள் முன்னிலையில் வரதராஜ பெருமாள் கோவிலில் தாயார் சன்னதிக்கு வெள்ளி கவசத்தடிகளை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்து பெருந்தேவி தாயார் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். பெருந்தேவி தாயாருக்கு விழாக்காலங்களில் பயன்படுத்தும் வகையில் வெள்ளி கவசத்தடிகள் கோவில் செயல் அலுவலர் என்.தியாகராஜனிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
Related Tags :
Next Story