கருங்கல்லில் தலை மோதி வாலிபர் சாவு


கருங்கல்லில் தலை மோதி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 5 Oct 2021 5:48 PM IST (Updated: 5 Oct 2021 5:48 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே ஓரிக்கையை சேர்ந்தவர் மோகனகிருஷ்ணன். இவர் அங்குள்ள ஒரு ஜெராக்ஸ் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் மோகனகிருஷ்ணனிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதில் பாலாஜிக்கும், மோகன கிருஷ்ணனுக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களது சத்தம் கேட்டு அங்கு வந்த மோகனகிருஷ்ணனின் தந்தை கார்த்திகேயன், உறவினர் பூபாலன் ஆகியோர் பாலாஜியிடம் தகராறில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஓரிக்கை சத்யா நகரை சேர்ந்த மோகன் (24), என்ற வாலிபர், தகராறு செய்து கொண்டு இருந்தவர்களை விலகி விட முற்பட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பூபாலன், மோகனை அடித்து கீழே தள்ளியுள்ளார். அப்போது கீழே இருந்த கூர்மையான கருங்கல்லில் அவரது தலை மோதியதில் ரத்த வெள்ளத்தில் மோகன் மயக்கமடைந்தார். இதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதும் விரைந்து வந்த காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மோகனை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபாலன் (35), கார்த்திகேயன் (34) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story