காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான நடமாடும் கண்காணிப்பு குழு வாகனங்கள் தயார்
காஞ்சீபுரத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான நடமாடும் கண்காணிப்பு குழு வாகனங்கள் 3 ஒன்றியங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
உள்ளாட்சி தேர்தல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நாளை(செவ்வாய்க்கிழமை) மற்றும் 9-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் அமுதவள்ளி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் முதல் கட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள அண்ணா காவல் அரங்கத்தில் போலீசாருக்கான நடமாடும் கண்காணிப்பு குழு வாகனம் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளுக்கு ஒதுக்கீடு பணி துவங்கியது.
53 கண்காணிப்பு வாகனங்கள்
அதில், காஞ்சீபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய ஒன்றியங்களுக்கு என 53 நடமாடும் கண்காணிப்பு வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு வாகனத்தில் ஒட்டப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் பதிவுப்புத்தகம், இன்ஸ்சூரன்சு நகல், டிரைவிங் லைசென்சு உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யபட்ட பின்பே அனுமதிக்கப்படுவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story