மாவட்ட செய்திகள்

பஜ்ஜி சாப்பிட்ட தாய்-மகன் சாவு + "||" + Mother-son killed after eating pajji

பஜ்ஜி சாப்பிட்ட தாய்-மகன் சாவு

பஜ்ஜி சாப்பிட்ட தாய்-மகன் சாவு
பெலகாவியில் பஜ்ஜி சாப்பிட்ட தாய், மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெலகாவி:

பெலகாவி மாவட்டம் ஹீதளி கிராமத்தை சேர்ந்தவர் பார்வதி (வயது 55). இவரது மகன் சோமலிங்கப்பா (28). இருவரும் விவசாயம் ெசய்து பிைழப்பு நடத்தி வந்தனர். இந்த நிைலயில் இருவரும் நேற்று முன்தினம் தோட்டத்தில் வேலை செய்தனர். மாலையில் வேலையை முடித்துக்கொண்டு இருவரும் வீட்டுக்கு சென்றுள்ளனர். பின்னர், பார்வதி பஜ்ஜி செய்துள்ளார். அதை தாய், மகன் இருவரும் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பெலகாவி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். 

ஆனால், ஆஸ்பத்திரிக்கு போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து மரியாளா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஜ்ஜி சாப்பிட்ட தாய்-மகன் பலியான சம்பவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு பிறகே அவா்களது சாவுக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெண் பார்க்க வந்தவருடன் மலர்ந்த காதலால் கர்ப்பம்: சாக்குமூட்டையில் கட்டி வைத்த பச்சிளம் குழந்தை சாவு பாட்டி கைது
பெண் பார்க்க வந்தவருடன் மலர்ந்த காதலால் கர்ப்பம் அடைந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை கொன்றதாக பாட்டி கைது செய்யப்பட்டார்.
2. கோவளம் கடலில் ராட்சத அலையில் சிக்கி கடற்படை அதிகாரி சாவு
கோவளம் கடலில் ராட்சத அலையில் சிக்கி மனைவி, மகள் கண் எதிேரயே கடற்படை அதிகாரி பரிதாபமாக இறந்தார்.
3. தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு 3 யானைகள் சாவு
கோவை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு 3 யானைகள் பரிதாபமாக இறந்தன.
4. தாய், மகன் தூக்குப்போட்டு தற்கொலை
தாய், மகன் தூக்குப்போட்டு தற்கொலை
5. எலி செத்து கிடந்ததால்: ஏ.சி.எந்திரத்தை சுத்தம் செய்தபோது பாம்பு கடித்து முதியவர் சாவு
எலி செத்து கிடந்ததால் ஏ.சி. எந்திரத்தை சுத்தம் செய்தபோது நல்ல பாம்பு கடித்ததில் முதியவர் பரிதாபமாக இறந்த சம்பவம் பள்ளிக்கரணை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.