பெண் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்


பெண் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 7 Oct 2021 8:03 PM IST (Updated: 7 Oct 2021 8:03 PM IST)
t-max-icont-min-icon

பெண் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

கோவை

குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்ட பெண் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் டி.ஐ.ஜி. அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார்.

மோசடி நிதி நிறுவனங்கள்

கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தவர் கலையரசி. 

இவர் பணியில் இருந்த போது மோசடி நிதி நிறுவனங்கள் தொடர்பாக ஏராளமான புகார்கள் பொருளாதார குற்றப்பிரிவுக்கு வந்து உள்ளன.

ஆனால் அவர், அந்த புகார்களை விசாரித்து உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல் காலம் கடத்தி வந்துள்ளார். 

மேலும் சில வழக்குக ளில் அவர் குற்றவாளிகளுக்கு சாதகமாகவும், பொதுமக்களுக்கு பாதகமாகவும் நடந்து கொண்டதாகவும் புகார் எழுந்தது.

குற்றவாளிகளுக்கு சாதகம்

இது தொடர்பாக கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமியிடம் கடந்த சில மாதங்களாக ஏராளமானவர்கள் புகார்கள் அளித்தனர். 

எனவே அந்த புகார்கள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

அவர்கள், விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் கலையரசி வழக்கு பதியாமல் காலம் கடத்தியதும், 

பதிவு செய்த வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டதும் உண்மை என்பது தெரியவந்தது.

பணியிடை நீக்கம்

இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்தார். 


Next Story