தனியார் பள்ளிக்கூட வாகனங்கள் ஆய்வு
தனியார் பள்ளிக்கூட வாகனங்கள் ஆய்வு
கோவை
1 முதல் 8-ம் வகுப்பு வரை திறக்கப்படுவதால் கோவையில் தனியார் பள்ளிக்கூட வாகனங்களை ஆய்வு செய்யும் பணியை கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்.
தனியார் பள்ளி வாகனங்கள்
கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கு முன்பு வட்டார போக்குவரத்துறை சார்பில் மாணவர்க ளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில்,
தனியார் பள்ளிக்கூட வாகனங்களை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கப்படும். அதன்படி, கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் தனியார் பள்ளிக்கூட வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நேற்று தொடங்கியது.
வழக்கமாக ஜூன் மாதத்தில், பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கு முன்னர், மே மாதம் இந்த பணிகள் நடக்கும்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக மேல்நிலை வகுப்பு கள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு நவம்பர் 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படு கிறது.
அதிகாரிகள் ஆய்வு
இதையொட்டி தனியார் பள்ளிக்கூட வாகனங்களை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தனியார் பள்ளிக்கூட வாகனங் களில் பள்ளிக்கூடத்தின் பெயர், தீயணைப்பு கருவிகள், அவசரகால வழி, முதலுதவி பெட்டிகள்,
வேககட்டுப்பாட்டு கருவிகள், குழந்தைகள் ஏறும் வகையில் படிக்கட்டுகளின் உயரம் உள்பட 21 வகையான அரசு விதிமுறைகள் சரியாக இருக்கிறதா? என வட்டார போக்குவரத்து அதிகாரிகளும், வாகன ஆய்வாளர்களும் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்து பேசியதாவது
தமிழ்நாடு மோட்டார் வாகன பள்ளி பேருந்துகள் முறைப்படுத்துதல் மற்றும் சிறப்பு விதிகள் 2012-ன்படி ஆய்வு பணிகள் தொடங்கி உள்ளன.
இதன்படி கோவையில் தெற்கு, வடக்கு, மேற்கு, மத்திய வட்டார எல்லைக்கு உட்பட்ட 230 தனியார் பள்ளிகளை சேர்ந்த 1,226 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. நேற்று 309 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
முக கவசம் கட்டாயம்
இதில் வாகனங்களில் குறைபாடு மற்றும் சரியான ஆவணங்கள் சமர்ப்பிக்காத 33 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
தனியார் பள்ளிக்கூட வாகனங்களில் செல்லும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story