உடும்புகளை வேட்டையாடிய 2 பேர் கைது


உடும்புகளை வேட்டையாடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 Oct 2021 8:22 PM IST (Updated: 7 Oct 2021 8:22 PM IST)
t-max-icont-min-icon

உடும்புகளை வேட்டையாடிய 2 பேர் கைது

இடிகரை

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் தடாகம் கன்னிமார் கோவில் பகுதியில் வனவர் முத்து தலைமையில் வனத்துறை யினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அவர்களை பார்த்ததும் 2 பேர் தப்பி ஓட முயன்றனர். உடனே அங்கு சென்று பார்த்த போது வேட்டையாடப்பட்ட 3 உடும்புகள் மற்றும் வலைகள் இருந்தன.


இதையடுத்து வனத்துறையினர் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்த னர். விசாரணையில் அவர்கள் காளம்பாளையம் ஊராட்சி பிளிச்சி கவுண்டனூரை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 41), மணி (42) என்பதும், அவர்கள் 2 பேரும் உடும்புகளை வேட்டையாடியதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

Next Story