வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
கோவை
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது.
இதில், வருவாய் சங்க நிர்வாகிகளை பழிவாங்கும் நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட பணியிட மாறுதல் ஆணையை ரத்து செய்து,
மீண்டும் அதே இடத்தில் வேலை வழங்க வேண்டும். 2019-ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வரும் இளநிலை வருவாய் ஆய்வாளர், தட்டச்சர் ஆகியோரின் தகுதி காண் பருவத்தை சரியான தேதியில் வெளியிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரையிலான அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story