அதிமுக எம்எல்ஏக்களுடன் திமுகவினர் கடும் வாக்குவாதம்


அதிமுக எம்எல்ஏக்களுடன் திமுகவினர் கடும் வாக்குவாதம்
x
தினத்தந்தி 7 Oct 2021 11:06 PM IST (Updated: 7 Oct 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக எம்எல்ஏக்களுடன் திமுகவினர் கடும் வாக்குவாதம்

இடிகரை

பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் நடந்த விழாவில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் தி.மு.க.வினர் கடும் வாக்குவாதம் செய்தனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் அரசு மருத்துவம னை உள்ளது. இங்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ் ஆகியோரின் ஏற்பாட்டில் தனியார் நிறுவனம் சார்பில் ரூ.65 லட்சத்தில் ஆக்சிஜன் தயாரிக்கும் கருவி நிறுவப்பட்டது. அதை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. 

இதில் கலந்து கொள்வதற்காக பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வ ராஜ் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், பா.ஜனதாவினர், 

பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்களும், தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், நகர செயலாளர்கள் விஷ்வபிரகாஷ், வீரபத்ரன் உள்பட தி.மு.க.வினர் வந்திருந்தனர். 

கடும் வாக்குவாதம்

இந்த நிலையில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த நிகழ்ச்சியில் மேட்டுப் பாளையம் எம்.எல்.ஏ. ஏ.கே.செல்வராஜ் கலந்து கொள்ள தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. க்களுடன் வாக்குவாதம் செய்தனர்.

அது போல் எந்த அரசு பொறுப்பிலும் இல்லாத தி.மு.க.வினர் கலந்து கொள்ளக் கூடாது என்று அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

அப் போது அவர்கள் மாறிமாறி தகாத வார்த்தைகளால் பேசிக் கொண் டனர். இருதரப்பிலும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் கைகலபபாக மாறும் நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வீடியோ வைரலானது

இதனால் இருதரப்பினரையும் மருத்துவமனை அதிகாரிகள் சமாதானம் செய்தனர். தி.மு.க., அ.தி.மு.க.வினர் இடையே ஏற்பட்ட மோதலை சிலர் செல்போனில் படம் பிடித்தனர். 

அந்த மோதல் வீடியோ காட்சி கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  அரசு மருத்து வமனையில் தி.மு.க., அ.தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story