மொபட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு


மொபட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு
x
தினத்தந்தி 7 Oct 2021 11:24 PM IST (Updated: 7 Oct 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

மொபட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு

பொள்ளாச்சி

லிப்ட் கேட்டு மொபட்டில் சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் பிரேக் போட்டதில் தவறி விழுந்த முதியவர் பரிதாபமாக இறந்தார். 

லிப்ட் கேட்டு சென்றார் 

பொள்ளாச்சி அருகே உள்ள அம்மேகவுண்டனூரை சேர்ந்த பரமன் (வயது 75). இவரது மகன் மணிகண்டன் (52). இவர்கள் 2 பேரும் அங்குள்ள ஒரு தென்னைநார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதால், அங்கு சென்று கொண்டு இருந்தனர். 

அப்போது அந்த வழியாக அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (40) என்பவர் மொபட்டில் வந்தார். அவரது வாகனத்தை தடுத்து நிறுத்திய மணிகண்டன், தனது தந்தையை நார் தொழிற்சாலையில் இறக்கிவிடுமாறு கூறினார். இதையடுத்து மோகன்ராஜ், பரமனை மொபட்டில் ஏற்றி சென்றார். 

பரிதாப சாவு 

அப்போது திடீரென்று நாய் குறுக்கே வந்தது. அதன்மீது மோதாமல் இருக்க மோகன்ராஜ் பிரேக் பிடித்தார். இதனால் நிலைதடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக பரமன் கோவை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

காயம் அடைந்த மோகன் ராஜூக்கு பொள்ளாச்சியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


Next Story