குப்பை தொட்டியாக மாறிய படகு இல்லம்


குப்பை தொட்டியாக மாறிய படகு இல்லம்
x
தினத்தந்தி 8 Oct 2021 10:32 PM IST (Updated: 8 Oct 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

குப்பை தொட்டியாக மாறிய படகு இல்லம்

வால்பாறை

போதிய பராமரிப்பு இல்லாததால் வால்பாறையில் உள்ள படகு இல்லம் குப்பை தொட்டியாக மாறி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வேதனை அடைந்து உள்ளனர். 

படகு இல்லம் 

மலைப்பிரதேசமான வால்பாறையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு இல்லம் அமைக்கப்பட்டது. பின்னர் கடந்த பிப்ரவரி மாதத்தில் சோதனை அடிப்படையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. 

இதற்காக சுற்றுலா பயணிகள் இலவசமாக படகு சவாரி செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்ததால், வால்பாறைக்கு சுற்றலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் படகு இல்லமும் மூடப் பட்டது.

குப்பை தொட்டியாக மாறியது 

தற்போது தொற்று பரவலாக குறைந்து வருவதால், வால் பாறைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார் கள். இந்த நிலையில், இங்குள்ள படகு இல்லத்துக்கு தண்ணீர் வரும் கக்கன் காலனி ஆற்றில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால், அந்த குப்பைகள் படகு இல்லத்துக்கு அடித்து வரப்படுகிறது. 

அவற்றை சுத்தம் செய்யாமல் விடப்பட்டதால் அந்த குப்பை கள் அனைத்தும் அப்படியே படகு இல்லத்தில் தேங்கி கிடக் கிறது. இதன் காரணமாக அது குப்பை தொட்டியாக மாறி விட்டதால், தண்ணீர் மாசு ஏற்பட்டு அருகில் செல்ல முடியாத அளவுக்கு கடுமையாக துர்நாற்றம் வீசி வருகிறது. 

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

பணிகள் பாதியில் நிற்கிறது 

வால்பாறை நகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் படகு இல்லத் தில் இன்னும் பணி முழுமையாக முடியவில்லை. பணியை முடிக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. அதுபோன்று தாவரவியல் பூங்கா, அக்காமலை தடுப்பணையை தூர்வாரும் பணி உள்பட பல்வேறு பணிகள் பாதியில் நிற்கிறது. 

படகு இல்லம் பணி பாதியில் விடப்பட்டதால், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதை பார்த்துவிட்டு உபயோகப்படுத்த முடியாததால் வேதனையுடன் திரும்பி செல்லும் நிலை நீடித்து வருகிறது. 

நடவடிக்கை எடுக்க வேண்டும் 

இது ஒருபுறம் இருக்க நகராட்சி முன்னாள் ஆணையாளர் மீது மோசடி வழக்கு நடந்து வருவதால், அந்த வழக்கு என்ன நிலை யில் இருக்கிறது என்பது தெரியவில்லை. இதனால் வளர்ச்சி பணிகள் குறித்து எவ்வித முடிவும் அதிகாரிகளால் எடுக்க முடியவில்லை.  

இதன் காரணமாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வளர்ச்சி பணிகள் செய்ய நடவடிக்கை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story