மாவட்ட செய்திகள்

பஸ் மோதி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி + "||" + Accident

பஸ் மோதி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி

பஸ் மோதி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி
பஸ் மோதியதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலியானார்.
மதுரை,

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள நல்லூரை சேர்ந்தவர் அழகர் (வயது 60), ஓய்வுபெற்ற அரசு ஊழியர். நேற்று காலை இவர் வேலை தொடர்பாக அதே ஊரை சேர்ந்த பூவாள் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது திருச்செந்தூரில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ் பெருங்குடி மண்டேலாநகர் ரிங்ரோடு பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில் நிலைதடுமாறி பின்னால் அமர்ந்திருந்த அழகர் கீழே விழுந்தார். அப்போது அரசு பஸ் அவர் மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்தும் அவனியாபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கப்பாண்டி உள்ளிட்ட போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தனர். அவர்கள் விபத்தில் பலியான அழகரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் சாவு
மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
2. வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
திருமங்கலம் அருகே நடந்த வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
3. சேலத்தில் பயங்கர விபத்து கியாஸ் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி 6 வீடுகள் தரைமட்டம்
சேலத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீயணைப்பு நிலைய அதிகாரி உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். 6 வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.
4. மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கண்டக்டர் பலி
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கண்டக்டர் உயிரிழந்தார்.
5. விபத்தில் தொழிலாளி சாவு
சேத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கூலித்தொழிலாளி பலியானார்.