மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் குவிந்த சாலையோர வியாபாரிகள்


மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் குவிந்த சாலையோர வியாபாரிகள்
x
தினத்தந்தி 9 Oct 2021 9:41 PM IST (Updated: 9 Oct 2021 9:41 PM IST)
t-max-icont-min-icon

மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் குவிந்த சாலையோர வியாபாரிகள்

கோவை

மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் பெற சாலையோர வியாபாரிகள் மத்திய மண்டல அலுவலகத்தில் குவிந்து விண்ணப்பம் கொடுத்தனர்.

ரூ.10 ஆயிரம் கடனுதவி

கொரோனா காரணமாக சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு வங்கிகள் மூலம் ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்கியது. 

கோவை மாநகரபகுதியில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனர். இதில், 7 ஆயிரம் பேருக்கு மட்டுமே மாநகராட்சியின் அடையாள அட்டை வழங்கப்பட்டதாக வியாபாரிகள்  குற்றம் சாட்டுகின்றனர்.


இந்த நிலையில் மத்திய அரசின் விபத்து காப்பீடு திட்டம், ஆயுள் காப்பீடு திட்டம், மாதாந்திர பென்சன் திட்டம், பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா, கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கும் தாய்மை திட்டம், 

அரசு ஆஸ்பத்திரி யில் பிரசவிக்கும் பெண்களுக்கான திட்டங்களில் பயன் பெற சாலையோர வியாபாரிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பெயர் விவரங்களை பதிவு செய்யும் முகாம் கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் கடந்த 6-ந் தேதி தொடங்கியது.

விண்ணப்பங்கள் பதிவு

கடைசி நாளான நேற்று பெயர்  விவரங்களை பதிவு செய்ய ஏராளமான சாலையோர வியாபாரிகள் மத்திய மண்டல அலுவலக வளாகத்தில் குவிந்தனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக் கும் வகையில் அமர வைக்கப்பட்டனர். 

இதையடுத்து அவர்கள் கொண்டு வந்த ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம், ரேஷன்கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டன. அந்த விண்ணப்பங்கள் கணினி மூலம் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டது. 


இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இந்த முகாமில் சாலையோர வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்க ளின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டது. 

இதன்மூலம் அவர்களுக்கு மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் எளிதாக கிடைக்கும் என்றனர்.


Next Story