இன்று 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு


இன்று 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு
x
தினத்தந்தி 9 Oct 2021 9:44 PM IST (Updated: 9 Oct 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

இன்று 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

கோவை

கோவையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் சிறப்பு முகாமில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப் பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் கொரோனா தடுப்பூசி மெகா முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது. 

இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது

கோவை மாவட்டத்தில் இதுவரை நடந்த 4 சிறப்பு முகாம் மூலம் 4 லட்சத்து 41 ஆயிரத்து 480 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 

கோவை மாவட்டத்தில் மக்கள் தொகையான 38,67,926 பேரில் 18 வயது பூர்த்தி அடைந்த தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதி உள்ளவர்கள் 27,90,400 பேர். 


இதில் 25,63,212 பேருக்கு (91 சதவீதம்) முதல் தவணை தடுப்பூசியும், 9,22,757 பேருக்கு (33 சதவீதம்) 2-ம் தவணை தடுப்பூசியும் போடப் பட்டு உள்ளது. 3,40,222 பேர் 2-ம் தவணை தடுப்பூசிக்காக காத்திருக் கின்றனர்.

சிறப்பு முகாம்கள்

எனவே இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் சிறப்பு முகாம்களில் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப் பட்டு உள்ளது.

 இதற்காக ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், வ.உ.சி மைதானம், சந்தை என கிராமப்புறங்களில் 1,104 இடங்கள், மாநகராட்சியில் 325 இடங்கள் என மொத்தம் 1429 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. 

இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். 

கொரோனா பாதிப்பால் தொழில், வேலை இழப்பு உள்ளிட்ட காரணங்களால் மன அழுத்தம் ஏற்பட்டு கடந்த 3 மாதத்தில் 20 ஆயிரம் பேர் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை மையத்திற்கு தொடர்பு கொண்டு உள்ளனர்.

 மாற்றுத்திறனாளிகளுக்கு மொபைல் வாகனம் மூலம் இதுவரை 67 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story