லாரி மீது பஸ் மோதல்


லாரி மீது பஸ் மோதல்
x
தினத்தந்தி 9 Oct 2021 9:58 PM IST (Updated: 9 Oct 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

லாரி மீது பஸ் மோதல்

பொள்ளாச்சி

கோவை அருகே உள்ள போத்தனூரில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த நிலையில் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் பள்ளி வாகனத்தில் வால்பாறைக்கு சுற்றுலா செல்வதற்காக நேற்று வந்துகொண்டிருந்தனர். பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். 

பஸ்சை மாணிக்கம் என்பவர் ஓட்டி சென்றார். அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து லாரி ஆழியாறு புளியங்கண்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் கண் இமைக்கும் நேரத்தில் பஸ், லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கியது. 

மேலும் பஸ்சில் பயணம் செய்த பள்ளி ஆசிரியை முத்துக்குமாரி (வயது 36) என்பவரது கால் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டது. இதுபற்றிய தகவலின் பேரில் ஆழியாறு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த ஆசிரியை மீட்டனர். பின்னர் படுகாயமடைந்த அவரை கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story