செய்யூர் அருகே கூட்ட நெரிசலில் வாக்குச்சாவடியில் மூதாட்டி மயங்கி விழுந்து சாவு
செய்யூர் அருகே கூட்ட நெரிசலில் வாக்குச்சாவடியில் மூதாட்டி மயங்கி விழுந்து சாவு.
மதுராந்தகம்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2-ம் கட்ட வாக்கு பதிவு காட்டாங்குளத்தூர், சித்தாமூர், மதுராந்தகம், அச்சரப்பாக்கம் ஆகிய ஒன்றியங்களில் நடைப்பெற்றது. இந்த நிலையில், செய்யூர் அடுத்த சித்தாமூர் ஒன்றியம் சூனாம்பேடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேலூர் பகுதியை சேர்ந்தவர் கற்பாமணி (வயது 70). இவர் வேலூர் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கை செலுத்த சென்றுள்ளார். கூட்ட நெரிசலில் நின்று வாக்களிக்க சென்ற கற்பாமணி மூச்சு திணறி திடீரென மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சூனாம்பேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் கற்பாமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஜனநாயக கடமையை செய்ய சென்ற மூதாட்டி மூச்சுத்திணறி சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
இந்த சம்பவம் குறித்து சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story