5-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்


5-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 10 Oct 2021 12:15 PM IST (Updated: 10 Oct 2021 12:15 PM IST)
t-max-icont-min-icon

5-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள கலெக்டர் வேண்டுகோள்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் இதுவரை நடைபெற்ற 4 மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அவற்றில் திருவள்ளூர் மாவட்டத்தில் 18 லட்சத்து 88 ஆயிரத்து 300 நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசி 12 லட்சத்து 39 ஆயிரத்து 639 நபர்களும், 2-வது தவணை தடுப்பூசி 4 லட்சத்து 36 ஆயிரத்து 401 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த மாபெரும் தடுப்பூசி முகாம்களில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதன் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தொற்றினால் பாதிக்கப்படுவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள 5-வது கொரோனா தடுப்பூசி முகாமில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த தடுப்பூசி முகாம்களில் விடுபட்ட பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் துறை, பள்ளிக் கல்வித் துறை, காவல் துறை போன்ற துறைகள் மூலம் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

Next Story