கோவையில் பரவலாக மழை
கோவையில் பரவலாக மழை
கோவை
கோவையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. 2 வாரத்திற்கு முன்பு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. ஆனால் கடந்த வாரம் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் மாநகர் பகுதி முழுவதும் சாரல் மழை பொழிந்தது. நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
காலை 10 மணி அளவில் கோவை அவினாசி ரோடு அண்ணா சிலை, பாப்பநாயக்கன் பாளையம், சித்தாபுதூர், காந்திபுரம், சிங்காநல்லூர், கணபதி, உக்கடம் உள்பட மாநகரில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் சாலைகளில் சென்ற வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தபடி சென்றன. மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story