4150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
4150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி மற்றும்சுற்றுவட்டாரப்பகுதியில் இருந்துசட்டவிரோதமாக அண்டைமாநிலமானகேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. இதற்கு காரணம்அங்கு அரிசிக்குகடும் கிராக்கி இருப்பதுடன், மிக அதிக விலை கிடைப்பதுதான்.அரிசிகடத்தலை தடுக்கமாவட்ட நிர்வாகம் தீவிரநடவடிக்கை எடுத்துவருகிறது.இந்நிலையில், .குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுபோலீஸ் சூப்பிரண்டுஸ்டாலின், துணை சூப்பிரண்டு கிருஷ்ணன்உத்தரவின்பேரில், நேற்று முன்தினம்பொள்ளாச்சிஇன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார், கோவை அருகே உள்ள ராமநாதபுரம் சிவராமன் நகரில் ஆய்வு செய்தனர். அப்போது, அங்குள்ள ஒருகுடோனில் ரேஷன் அரிசி சட்டவிரோதமாகபதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை
கண்டுபிடித்தனர். 83 பைகளில் தலா 50 கிலோ வீதம் மொத்தம்4ஆயிரத்து150 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அதனை போலீசார் உடனடியாக பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக அதே பகுதியில் வசிக்கும் ஆண்டிபட்டியை பூர்விகமாக கொண்டமுருகன் (வயது49) என்பவரைகைது செய்தனர். தப்பியோடிய சிவா (21) என்பவரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி கேரளாவிற்கு கடத்த பதுக்கிவைக்கப்பட்டு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story